காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி இலண்டனில் கவனயீர்ப்பு.

நாடு கடந்த தமிழீழ அரசு ஒழுங்கமைப்பில் north terraceTrafalgar Square London வலிந்து காணமலாக்கப்பட்வர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன்  நேரப்படி 1_3மணிவரை இவ் ஆர்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது.
வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடல் கடந்த உறவுகள் இதில் ஈடுபட்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி தேவை என பல கோசங்களை எழுப்பி பதாகைகளை ஏந்தியவாறு இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இதனை முன்னெடுத்திருந்தனர்.இதில் பெரும்பாலான இலங்கை நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்