பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஆப்கான் பயணம் தாலிபான்களின் அழைப்பின் பேரில் சென்றதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்க தலிபான்கள் போராடி வரும் நிலையில் பாகிஸ்தான் தாலிபான்கள் உளவுத்துறை தலைவர் லெப்டினட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை காபூலுக்குச் சென்றார் .

தாலிபான் தலைவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சென்றதாகவும்,இருநாடுகளும் எதிர்கால உறவுகள் குறித்து விவாதிக்க சென்றிருப்பதாகவும் ஃபைஸ் ஹமீத் தனது ட்விட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை இன்னும் சில தினங்களில் அமைக்க இருப்பதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பரந்த நிர்வாகத்தை ஏற்படுத்த தாலிபான்கள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்