அகதிகளை தடுத்து வைக்க மீண்டும் ஒப்பந்தம்: ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தானது

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள்  நவுருத்தீவில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மீண்டும் ஆஸ்திரேலியா- நவுருத்தீவு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2012ல் நவுருத்தீவினை கடல் கடந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலனை மையமாக பயன்படுத்த தொடங்கிய ஆஸ்திரேலியா, அத்தீவினை தொடர்ந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கும் மையமாக பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நவுருவுடன் கையெழுத்திட்டுள்ளது.

“சட்டவிரோதமாக படகில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது நவுருத்தீவுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் தஞ்சக்கோரிக்கையாளர் பரிசீலனை முறையை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறியுள்ளார் நவுரு ஜனாதிபதி லைனெல் ஐங்கிமே.

“ஆஸ்திரேலியாவால் நவுருவுக்கு கொண்டு வரப்படும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக கையாள்வதற்கான செயல்முறை உருவாக்கப்படும்,” என நவுரு ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைய நிலையில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் செயல்படக்கூடிய நவுருவில் 108 தஞ்சக்கோரிக்கையாளர்களும் பப்பு நியூ கினியாவில் 125 தஞ்சக்கோரிக்கையாளர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.