ஆஸ்திரேலியாவின் காலவரையற்ற தடுப்புக் காவல், பரவும் கொரோனா: பெருங்கவலையில் அகதிகள்

சமீபத்திய கணக்குப்படி, ஆஸ்திரேலிய அரசால் மெல்பேர்ன் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 அகதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சி மேலவை உறுப்பினர் நிக் மெக்கிம்  தெரிவித்துள்ளதன் படி, 2 அகதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு நவுருத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

“அச்சம் தரக்கூடிய இந்த சூழலில் நாங்கள் இருப்பதற்கு காரணம், இங்குள்ள சில காவலாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்றனர்,” என அகமது எனும் அகதி தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் இங்கு மிக பயந்து போயுள்ளோம். கவலையுடன் உள்ளோம். தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை,” எனக் கூறும் 25 வயது அகதியான டான் கான், தாங்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலிய மேலவையில் தெரிவித்த கணக்குப்படி, ஆஸ்திரேலிய பொது மக்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பில் உள்ள அகதிகளுக்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அக்கணக்குப்படி, தடுப்பில் உள்ள 52 சதவீதமானோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 17 சதவீதமானோருக்கு முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுவே, ஆஸ்திரேலிய பொது மக்களில் 63 சதவீதமானோருக்கு முதல் தவணையும் 39 சதவீதமானோருக்கு முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.