ஆஸ்திரேலியா: மனிதாபிமான விசாக்களை கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?

சிரியாவிலிருந்து வெளியேறிய மிர்னா ஹடடாட் மற்றும் அவரது குடும்பமும் ஆஸ்திரேலிய மனிதாபிமான விசா கிடைத்ததும் தங்கள் வாழ்க்கை சிறந்ததாக மாறும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு அவர்கள் எண்ணத்தை சீர்குலைத்திருத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அரசின் எல்லை கட்டுப்பாடு காரணமாக விசா கிடைத்து இரண்டு ஆண்டுகளாகியும் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முடியாமல் ஈராக்கில் வாழ்ந்து வருகின்றனர்.

“ஆஸ்திரேலிய விசா கிடைத்த அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியானது. எங்களது அனைத்து கஷ்டங்களும் முடிந்துவிடும் என நினைத்தோம். விமானக் கட்டணங்களுக்காக எங்களது காரையும் விற்றுவிட்டோம்” எனக் கூறுகிறார் மிர்னா ஹடடாட்.

“ஆனால் திடீரென்று அனைத்தும் மாறிப்போனது. ஆஸ்திரேலியாவுக்கு சென்று குடியேறுவோம் என நினைத்திருந்தோம், இப்போது ஈராக்கில் இருக்கிறோம்.”

முறையான ஆஸ்திரேலிய விசா இருந்தும் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முடியாமல் உள்ளவர்களில் மிர்னா ஹடடாட் மற்றும் அவரது குடும்பமும் உள்ளடங்கும்.

தற்காலிக விசா கொண்ட சுமார் பத்து லட்சம் பேரும், 10 ஆயிரம் அகதிகளும் ஆஸ்திரேலிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

சமீபத்தில் திறக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் வழியே செல்ல ஆஸ்திரேலிய குடிமக்களும் நிரந்தரமாக வசிப்பவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிக விசா மற்றும் மனிதாபிமான விசாவாசிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியுள்ளனர்.

Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்