இலங்கையைச் சேர்ந்த நபர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்

.
இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகின்றன.
கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும் கும்பலொன்று கோஷங்களை எழுப்பியவாறு காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
உடலை அவர்கள் எரிப்பதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இந்தப் படுகொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து பொலிஸார் இதுவரையில் எதனையும் தெரிவிக்கவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்