மலேசியாவுக்கு படகு வழியாக சென்ற இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

மலேசியா: மலாய் தீபகற்பத்தில் இந்தோனேசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்திற்கு உள்ளானதில் 11 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.

மலேசிய கடல்சார் அமலாக்க முகமை மற்றும் மலேசிய கடற்படை கூற்றுப்படி, இப்படகில் சென்ற 25 பேர் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் இதில் 14 புலம்பெயர்ந்தோரும் அவர்கள் சென்ற படகும் Tanjung Balau கடற்கரையில் கண்டறியப்பட்டிருக்கிறது.

“இந்த படகு இந்தோனேசியாவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. கடுமையான அலைகள் காரணமாக இப்படகு கவிழ்ந்திருக்கிறது,” என ஜோஹோர் கடல்சார் நடவடிக்கைகளின் துணை இயக்குநர் லோக் அக் துசா தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவின் தொழிற்சாலைகளிலும் தோட்டங்களிலும் பணியாற்றும் நோக்கத்துடன் அந்நாட்டிற்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டவிரோத படகுப் பயணங்களின் போது இவ்வாறு மோசமான விபத்துகளில் சிக்குவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது.

இந்தோனேசியாவில் செயல்படும் Migrant CARE அமைப்பின் கணக்குப்படி, ஆண்டுதோறும் வேலைத்தேடி சட்டவிரோதமாக மலேசியாவுக்கு செல்லும் இந்தோனேசியர்களின் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை உள்ளது. இதில் பலர் கடத்தல் கும்பல்களின் வசம் சிக்கி மலேசியாவில் சுரண்டலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்