இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி ஐ.நா முன்றலில் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்

 

இலங்கை அரசாங்கத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 08/03/2022 புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர் ஜெனீவா நேரம் பி.ப 2மணி தொடக்கம் மாலை வரை குறித்த போராட்டத்தை புகலிடத் தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்