இலங்கை செய்திகள்

கதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் 11 நாளான இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை 24 மணித்தியாலங்களில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாக எந்தவெரு ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலால் குழப்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு – பட்டங்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ள நிலையில், கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப ...

மேலும்..

கொரோனாவினால் வெறிச்சோடியது நிலாவெளி கடற்கரை

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை – நிலாவெளி கடற்கரை பிரதேசமாகும். என்றுமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நிலாவெளி கடற்கரையானது தற்போது நிலவி வரும்சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ...

மேலும்..

தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு

மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன என்பரே உயிரிழந்துள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ...

மேலும்..

இலங்கையில் வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை

நாட்டின் சில பாகங்களில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வேதியியல் முறைமை உள்ளிட்ட ஏனைய சில முறைகள் குறித்து விவசாயிகளை தெளிவூட்டுவதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும் என விவசாய திணைக்களத்தின் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள்! – மக்களிடம் மஹிந்த கோரிக்கை

"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச. அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பொதுத்தேர்தலைக் ...

மேலும்..

சம்மாந்துறையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு கை கழுவும் இயந்திரம் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம்    சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளினையடி-1 கிரம சேவகர் பிரிவில் இயங்கி வரும்  விழித்திருக்கும் இளைஞர் கழகத்தால் கொரோனாவை  கட்டுப்படுத்தும் முகமாக இன்று (10) கை கழுவும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் ...

மேலும்..

மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி

வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகின்றது – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு…

க.கிஷாந்தன்) நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய 09.06.2020 அன்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இந்த சுற்றிவளைபின் போது 1150 ரூபாவுக்கு விற்க வேண்டிய ஒரு ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் – பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் எச்சரிக்கை!

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் தங்கள் குடும்பங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் என எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று ...

மேலும்..

இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள்,  தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...

மேலும்..

கொரோனாச் சட்டத்தால் மக்களை முடக்கிவிட்டு காணி அபகரிப்பு நடவடிக்கையில் இராணுவம்…

கொரோனாச் சட்டத்தால் மக்களை முடக்கிவிட்டு காணி அபகரிப்பு நடவடிக்கையில் இராணுவம்; தமிழ் பிரதிநிதிகளை செயலற்றவர்களாக காட்டவும் முயற்சி. முன்னாள் எம்.பி சிவமோகன் காட்டம். கொரோனாச் சட்டத்தினால் மக்களை முடக்கி வைத்துக்கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா என்கின்ற சிங்கள பிரதேசசெயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய ...

மேலும்..

கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள தொல்பொருட்களை ...

மேலும்..