January 16, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 17 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங் கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ...

மேலும்..

அரசாங்கம் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை- சஜித்

வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கமும் போலவே சில கட்சி அரசியல் தரப்பினரும் ...

மேலும்..

77 ஓட்டங்களுக்குள் இலங்கையை சுருட்டி அபார வெற்றி பெற்ற இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை…

தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய ...

மேலும்..

சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

சுதந்திர மக்கள் முன்னணியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. அண்மையில் உத்தர லங்கா கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உட்பட 12 கட்சிகள் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பை உருவாக்கின. கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் ...

மேலும்..

தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசம்

தலவாக்கலை மிடில் டிவிசன் நடுக்கணக்கு தோட்ட பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறித்த குடியிருப்பில் இருந்த 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயினை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைக்கும் படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீப்பரவல் ...

மேலும்..

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மேலும் ஆதரவு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான விஜயம் நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஆதரவளிப்பதே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் முதன்மை நோக்கம் என ...

மேலும்..

வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை

நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அறிக்கைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிசீலனைக்கு பின் ...

மேலும்..

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ...

மேலும்..

எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக பொங்கல் திருநாள் அமையும்.-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக இத் தைப் பொங்கல் திருநாள் அமையும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே ...

மேலும்..

வவுனியா கிறிஸ்தவ தேவாலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு!

வவுனியா நகரில் உள்ள இலங்கை திருச்சபையில் (தூய ஆவியானவர் ஆலயம்) தைப்பொங்கல் நிகழ்வும் விசேட வழிபாடும் இன்று (15) இடம்பெற்றது வவுனியா குடியிருப்பு ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் (அங்கிலிக்கன்) உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் உழவர் திருநாள் பண்டிகையை ...

மேலும்..