May 18, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக மக்களும் இணைந்து இன்று ...

மேலும்..

ஊவா மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று வியாழக்கிழமை (18) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு ...

மேலும்..

பெருமளவிலான போதைப் பொருள்களுடன் பல நாள் மீன்பிடி கப்பலுடன் 6 பேர் கைது! 

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் நடவடிக்கையில், ...

மேலும்..

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவர முடிவு!  ஆராய்வதற்கும் குழு

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழுவில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, சமூக நலன்புரி நன்மைகள் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதனை ...

மேலும்..

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தத் தீர்மானம்! 

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ...

மேலும்..

பொரளையில் இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு;பொலிஸார் குவிப்பு!

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்  மன்னார் மாவட்டத்திலும் உணர்வெழுச்சி! 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை( காலை 8 மணியளவில் மன்னார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் பொது ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் நியமனம் நல்லிணமக்கம் ஏற்படுவதற்கான சிறந்த சமிக்ஞை ஆகும்!  அமைச்சர் ஜீவன் நம்பிக்கை

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அதேபோல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் ...

மேலும்..

கொழும்பில் பணிபுரிந்த யாழ்ப்பாண இளைஞனை 7 மாதங்களாக காணவில்லை என முறைப்பாடு! மக்களின் உதவியை நாடியுள்ள தாயார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல் ...

மேலும்..

தொழில் சட்டங்களில் மறுசீரமைப்புக்கு எந்தசர்வதேச அமைப்பும் கோரவில்லை!  என்கிறார் மனுஷ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  அரசாங்கம் நாட்டின் தொழில் துறை  சட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. நூறுவருட பழைமைவாய்ந்த இந்த சட்டத்தை சர்வதேச சட்டத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்வதே எமது நோக்கமாகும் ...

மேலும்..

மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும்   பாதிரியாரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை!  பிரசன்ன ரணதுங்க போர்க்கொடி

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு எதிராக அரசமைப்பு ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் இருந்து பௌத்த மதத்துக்கு எதிராக பேசியவர்கள் மீதும், ...

மேலும்..

அரசு தன்னிச்சையாக செயற்பட முடியாது தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க முடிவு!  ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களது விருப்பமும் காணப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகவுள்ளது. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்தால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..