November 23, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலகளாவியக் குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் ...

மேலும்..

தேர்தலைப் பிற்போடுகிறது அரசாங்கம் பிரிட்டன் தூதரிடம் அனுர சுட்டிக்காட்டு

ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்;கான பிரிட்டனின் தூதுவர் அன்ரூ பட்ரிக்கை சந்தித்து பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் விஜிதஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார். பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின் போது இலங்கையின் சமீபத்தைய பொருளாதார நிலை குறித்து ஆராயபட்டதாக ருவிட்டரில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க தேர்தல்களை நடத்தாமலிருக்கும் அரசாங்கத்தின் ஜனநாயகவிரோத ...

மேலும்..

விடுதலைப் புலிகளுடன் கூட்டமைப்பையும் ஒழித்திருக்க வேண்டும் : சரத் வீரசேகர!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் ...

மேலும்..

75 வருடங்களாக முறையான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை

கடந்த 75 வருடங்களாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான வரவு செலவு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போNது அவர் ...

மேலும்..

மாவீரர் வாரத்தை முன்னிட்டு கட்டப்பட்ட கொடிகள் அறுக்கப்பட்டன!

யாழில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு, கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த சிவப்பு – மஞ்சள் கொடிகள் இனம்தெரியாத நபர்களினால் அறுத்தெரியப்பட்டுள்ளன. துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் தற்போது காணப்படும் நிலையில், அருகில் உள்ள ...

மேலும்..

பரதம் குறித்த மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம்!

மௌலவி ஒருவரால் பரதநாட்டியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து மிகுந்த கவலையளிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதனை வன்மையாகக் கண்டிப்பதாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...

மேலும்..

முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு நாடாளுமன்றில் வாழ்த்துத் தெரிவிப்பு!

அண்மையில் பிலிப்பைன்ஸ்  நாட்டில்  நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்  போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை அகிலத் திருநாயகி  இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஆகவே  இவருக்கு இந்த உயரிய சபை ஊடாக வாழ்த்தைத் தெரிவித்துக் ...

மேலும்..

அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்கவேண்டியது பொறுப்பாகும் ஜனாதிபதி ரணில் ஆணித்தரம்

இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே, அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை ...

மேலும்..

10 பில்லியன் ரூபா தேர்தல் ஒதுக்கம்! ரஞ்சித் சியம்பலபிடிய தகவல்

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க ...

மேலும்..

நீதிமன்றை ஆடைபைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி! மைத்திரிபால சிறிசேன வேதனை

பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விவாதிக்க கூடாது, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகளை மேற்கோள்காட்டி விவாதிக்கக் கூடாது என நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது சபையில் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படுகிறது. விமர்சனங்கள் ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலைகளை என்றைக்கும் விற்கமாட்டோம்! பந்துல திட்டவட்டம்

அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் எந்த ஓர் ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது  என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சின் அறிவித்தல் ஒன்றை ...

மேலும்..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை செயலாளரிடம் மன்னிப்புக் கோரினேன்! ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ஜெய்ஷா குறித்து இலங்கையில் வெளியான கருத்துக்களுக்காக அவரிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ...

மேலும்..

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது தொலைபேசி பாவனையை தடை செய்யுங்கள்! நீதியமைச்சர் விஜயதாஸ கோரிக்கை

மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதை விடுத்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினருக்கு இடையிலான மோதல் தொடர்பில் ஆராயவே நாடாளுமன்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலைக்கு பிரதமர், சபாநாயகர் உட்பட ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். சபை நடவடிக்கைகளின் போது தொலைபேசி பாவிப்பதை முதலில் ...

மேலும்..