Posts Tagged "jaffna news"

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது

பெரியப்பா முறையிலான ஒருவரால் 17 வயது சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் தங்கி இருந்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து – மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) முற்பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு ...

மேலும்..

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ...

மேலும்..

யாழில் கடலில் சடலம் மீட்பு

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய கந்தசாமி சிவராசா என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

வடமராட்சியில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ...

மேலும்..

யாழில் காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு ...

மேலும்..

சிவாஜிலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது உண்மையே – கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு

தமிழ் தேசிய கட்சியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்ததுடன், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

யாழில் பதைபதைப்பு சம்பவம் – 19 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்டு பெண்ணை கூட்டிச் சென்ற 55 வயது நபர் – திருமணம் செய்து வைக்குமாறு கேட்க பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நிலையில் தாக்கப்பட்டு கொலை

19 வயதுடைய இளம் பெண் ஒருவரை வீட்டைவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட 55 வயதுடைய ஒருவர் பெண்ணின் ஊரவர்களினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேரை சுன்னாகம் பொலிஸார் கைது ...

மேலும்..

மட்டுவிலில் மூதாட்டி கொலை – திடுக்கிடும் தகவல்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்குப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த மூதாட்டி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்றுப் பகல் ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நிகழ்வுகள்

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத் ...

மேலும்..

68 வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்தவருக்கு கௌரவிப்பு!

தனது 68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த திரு. வைத்திலிங்கம் கைலைநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி - சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மங்கல ...

மேலும்..

கரப்பந்தாட்ட போட்டியின் பிரமாண்ட இறுதிப்போட்டி

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 58 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை (23) இடம்பெறவுள்ளது. வளர்மதி விளையாட்டுக்கழகத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ...

மேலும்..

நாவாந்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (16) இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ...

மேலும்..

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக்கூட்டம் இன்று இடம்பெற்றது

நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14) காலை நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேசத்தின் கடல் போக்குவரத்து, சுற்றுலாத்துறை உள்ளிட்ட ...

மேலும்..

அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்ற (13) முன்னெடுக்கப்பட்டது. வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள திருவுருவச் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ...

மேலும்..