மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

வழமைபோல் இலங்கை மகளிர் அணிக்கு சமரி அத்தபத்து தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குழாத்தில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளுடன் சில இளம் வீராங்கனைகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷாதி ரணசிங்க, இனோக்கா ரணவீர ஆகிய சிரேஷ்ட வீராங்கனைகள் இலங்கை மகளிர் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2004இல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை நடத்தப்பட்டுள்ள 7 அத்தியாயங்களில் இந்தியா 6 தடவைகள் சம்பியனாகியுள்ளது. பங்களாதேஷ் நடப்பு சம்பியனாக இம்முறை போட்டியிடவுள்ளது.

முதல் நான்கு அத்தியாயங்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை ஒரு சந்தர்ப்பத்திலும் சம்பியனாகவில்லை.

இந்த முறை ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்க சமரி அத்தபத்து தலைமையில இலங்கை மகளிர் அணி முயற்சிக்க உள்ளது.

இலங்கை குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவீஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுதியங்கா, ஓஷாதி ரணசிங்க, மல்ஷா ஷெஹானி, மதுஷிக்கா மெத்தானந்த, இனோக்கா ரணவீர, ரஷ்மி சில்வா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.