நெதர்லாந்து அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணிக்கு இலங்கை அணி 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருபதுக்கு 20 போட்டிகளில் அவர் பெற்ற 9ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 44 பந்துகளுக்கு முகங்கொடுத்து 05 நான்கு ஓட்டங்கள் 05 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், சரித் அசலன்க 31 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணியின் பவுல் வான் மீகெரென் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அத்துடன்,பாஸ் டி லீடே 03 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், டிம் வான் டெர் குக்டன் 03 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்சில் மொத்தமாக 04உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெதர்லாந்து அணி 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்