உலகக்கோப்பையில் இமாலய வெற்றி பெற்ற இலங்கை!

குசால் மெண்டிஸ் – அசலங்கா கூட்டணி 70 ஓட்டங்கள் எடுத்தது

அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்   

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இலங்கை – அயர்லாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்களே எடுத்தது.

அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 45 ஓட்டங்களும், ஸ்டிர்லிங் 34 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கையின் தீக்ஷணா, ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தனஞ்செய டி சில்வா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும், ருத்ர தாண்டவம் ஆடிய குசால் மெண்டிஸ் 43 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அவருக்கு உறுதுணையாக துடுப்பாட்டம் செய்த அசலங்கா 22 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்தார். இவர்களின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்