உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது.

16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்து அணி

உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல் | England Win T20 World Cup Prize Amount Awarded

இதன்படி, உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடர்களில் இரண்டாவது முறையாகவும் இங்கிலாந்து அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டிகளில் அணிகள் பெற்ற பரிசுத் தொகை குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கமைய, வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அணிக்கு கிடைத்த பரிசு

உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல் | England Win T20 World Cup Prize Amount Awarded

அத்துடன், இறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு 7.40 கோடி ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய அணிக்கு 4.50 கோடி ரூபாவும், இலங்கை அணிக்கு 1.85 கோடி ரூபாவும் பரிசாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.