முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த  இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களைப் பெற்றது.

டேவிட் மாலன் 128 பந்துகளில 4 சிக்ஸர்கள்,

, 12 பவுண்டறிகள் உட்பட 132 ஓட்டங்களைக் குவித்தார். பின்வரிசை வீரர் டேவிட் வில்லி 40 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் அடம் ஸம்பா 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  பட்கம்மின்ஸ் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது.

 

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  டேவிட் வோர்ணர் 84 பந்துகளில் 86 ஓட்டங்களையும்  ட்ரேவிஸ் ஹெட் பந்துகளில் 69 ஓட்டங்களையும் குவித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 78 பந்துகளில்  ஆட்டமிழக்காமல் 80  ஓட்டங்களைக் குவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.