சவூதி – ஆர்ஜென்டீனா போட்டியில் காயமுற்ற வீரரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட சவூதி இளவரசர்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சவூதி அரபியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக கோல் காப்பாளரின் முழங்கால் பட்டு கீழே விழுந்த சவூதி அரேபிய தேசிய அணி வீரர் யாசர் அல்-ஷஹ்ரானி காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக பரிசோதனை செய்த போது இரத்தப்போக்கு காரணமாக அவருக்கு அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததுடன் தாடை மற்றும் முகம் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதை X-கதிர்கள் காட்டுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 
சிறந்த வீரர் யாசர் அல் ஷஹ்ராணியின் நிலமையை அறிந்த சவுதி இளவரசர் சிகிச்சைக்காக அவசர உத்தரவின் பேரில், ஒரு தனியார் விமானம் மூலம் வீரர் யாசர் அல்-ஷஹ்ரானியை உடனடியாக தனியார் விமானம் மூலம் சிகிச்சைக்காக ஜெர்மனிக்குக் கொண்டு செல்ல உத்தவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்