ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் உலக சாதனை

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஓர் ஓவரில் 7 சிக்ஸர்களை  அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

விஜய் ஹஸாரே  கிண்ணத்துக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் அவர் இச்சாதனையை படைத்தார்.

49 ஆவது ஓவரில் உத்தரப் பிரதேச வீரர் ஷிவா சிங் பந்துவீசினார்.

அந்த ஓவரில் தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை ருதுராஜ் கெய்க்வாட் விளாசினார்.

அந்த ஓவரின் 5 ஆவது பந்து நோ போல் ஆக அமைந்தது. அதிலும் ருதுராஜ் சிக்ஸர் விளாசியதால், குறித்த  ஓவரில் மொத்தமாக 43 ஓட்டங்களை அவர் பெற்றார்.

அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 10 பவுண்டறிகள், 16 சிக்ஸர்கள் உட்படஆட்டமிழக்காமல் 220 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏ தர கிரிக்கெட் போட்டிகளில் இது புதிய உலக சாதனையாகும். ஏ தரப் போட்டியொன்றின் ஓர் இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையையும் ஷிவா சிங் சமப்படுத்தினார்.

இப்போட்டியில் மாஹாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களைக் குவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.