இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் விசாரணைக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷாலினி ரோஷனா பெர்னாண்டோ ஆகியோர் குழுவின் எஞ்சிய ஐந்து உறுப்பினர்களாவர்.

ஒக்டோபர் 16 முதல் நவம்பர் 13, 2022 வரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது தேசிய கிரிக்கெட் அணியின் பங்கேற்பு மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பணியை இந்தக் குழு கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.