மேற்கிந்திய அணிக்கு 498 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  4 விக்கெட் இழப்புக்கு 598 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றநிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த மார்னஸ் லபுஸ்சேன் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரின் 9 ஆவது டெஸ்ட் சதமாகும்.

498 ஓட்டங்கள் எனும் இலக்கு நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய அணி இன்றைய ஆட்டமுடிவின்போது  3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அணித்தலைவர் கிறேக் ப்ராத்வெய்ட்  101 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரின் 11 ஆவது டெஸ்ட் சதமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்