கால் இறுதிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா – மெஸ்ஸி கடந்த 1000மாவது போட்டி!

ஆர்ஜென்டினா அணியின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி நேற்று தனது கால்பந்து வாழ்க்கையில் ஆயிரமாவது போட்டியை எதிர்கொண்டார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார்.

இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 1 க்கு 2 என்ற கணக்கில் கோல்களை அடித்து உலகக்கிண்ண கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

கட்டார் அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.
இது அவரது கால்பந்து வாழ்க்கையில் 789வது கோலாக அமைந்தது.

பின்னர் இரண்டாவது பாதியில் முன்கள வீரர் ஜூலியன் அல்வாரெஸ் இரண்டாவது கோலை அடித்த நிலையில் ஆர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்