36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் சற்று முன்னர் நிறைவடைந்த  ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இறுதிநேரம் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 4 – 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நொக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சம்பியன் பிரான்ஸும், முன்னாள் சம்பியன் ஆர்ஜன்ரீனாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

 

இரண்டு அணிகளும் தலா இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்று மூன்றாவது முறை உலக கிண்ணத்தை தமதாக்கிக் கொள்ளும் நோக்குடன் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணியினரும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

ரசிகர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்ற ஆட்டம் - 22 ஆவது உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது ஆர்ஜன்ரீனா | Argentina Won The 22Nd World Cup

இதனையடுத்து போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணி சார்பில் 2 ஆவது கோலை Ángel Di María அடித்தார். அதனடிப்படையில் முதல் பாதி முடிவில் 2 – 0 என ஆர்ஜன்ரீனா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது பாதியில் ஆட்டம் சூடு பறந்தது. இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கின. போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé கோல் அடித்து அசத்தினார்.

இதனையடுத்து ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. தொடர்ந்நது போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார்.

அதனடிப்படையில் போட்டியின் 90 ஆவது நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 2 – 2 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன்போது போட்டியின் 108  ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனா அணி சார்பில் அணித் தலைவர் மெஸ்ஸி கோல் அடித்தார்.

ரசிகர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்ற ஆட்டம் - 22 ஆவது உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது ஆர்ஜன்ரீனா | Argentina Won The 22Nd World Cup

 

இதனையடுத்து போட்டியின் 118 ஆவது நிமிடத்தில் kylian mbappé மீண்டும் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனையடுத்து மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 – 3 என்ற ரீதியில் சமநிலையில் இருந்ததன.

ரசிகர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்ற ஆட்டம் - 22 ஆவது உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது ஆர்ஜன்ரீனா | Argentina Won The 22Nd World Cup

 

இதனையடுத்து பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 – 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி போட்டியில் வெற்றி பெற்றது.

ரசிகர்களை விரல் நுனிக்கு கொண்டு சென்ற ஆட்டம் - 22 ஆவது உலக கிண்ணத்தை தன்வசமாக்கியது ஆர்ஜன்ரீனா | Argentina Won The 22Nd World Cup

 

இம்முறை கால்பந்து உலக கிண்ண தொடரில் 7 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தமைக்கான கோல்டன் பூட் விருதை kylian mbappé தனதாக்கி கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.