இலங்கை ‘ஏ’ அணியில் குசல் ஜனித் பெரேரா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் இலங்கை “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா, ​பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சாமிக கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, சதீர சமரவிக்ரம, லக்ஷான் சந்தகென், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, கவிஷ்க அஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்