புலம்பெயர்ந்தோருக்காக கனடா மேற்கொள்ளும் பயனுள்ள நடவடிக்கை!

கொரோனா பரபரப்பின் மத்தியிலும் கனடா புலம்பெயர்தல் துறை புலம்பெயர்ந்தோருக்கு பயனளிக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது.

அதாவது, ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவரின் கணவன் அல்லது மனைவியின் spousal immigration விண்ணப்பங்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்வதென கனடா புலம்பெயர்தல் துறை முடிவு செய்துள்ளது.

உங்கள் கணவர் அல்லது மனைவியின் கனேடிய நிரந்தர வாழிட உரிமைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பினால், கொரோனா சிறப்பு நடவடிக்கைகளின் மத்தியில் அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் தொடங்கலாம்.

கனடாவிலிருக்கும் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் கனேடிய குடிமக்களின் கணவன் அல்லது மனைவியின் Spousal மற்றும் common-law ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பங்களை தொடர்ந்து பெறுவதென கனேடிய அரசு முடிவு செய்துள்ளதாக அது அறிவித்துள்ளது.

கனடாவிலிருக்கும் மற்றும் கனடாவுக்கு வெளியிலிருக்கும் இதுவரை விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நற்செய்தி.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்