கனடாவில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியருக்கு நேர்ந்த துயரம்! வெளியான முழு விபரம்

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton-ல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார்.
அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார்.
அவர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக William Osler Health System வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் ஊழியரின் மறைவு வேதனையளிக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் அவர் குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்