பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஹைட்ரோ ஒரு கொவிட் -19 நிவாரண நிதியை ஏப்ரல் 1ஆம் திகதி முன்வைத்தது. மேலும், நெருக்கடி தொடர்ந்தாலும், அவர்கள் பணம் செலுத்த முடியாவிட்டால், மக்கள் சேவையைத் துண்டிக்காது. ஆனால் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 500 இற்க்கும் மேற்பட்ட மோசடி முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாக கிரவுன் கார்ப்பரேஷன் கூறுகிறது.

முன்கூட்டியே செலுத்திய பணம் அல்லது கடனட்டைகள் மூலமாகவோ அல்லது பிட்காயின் ஏடிஎம்கள் மூலமாகவோ பணத்தை ஏற்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.