வீடற்ற 1,000பேர் தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றம்: பிரிட்டிஷ் கொலம்பியா திட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் என மாகாணம் நம்புகின்றது.

சமூக மேம்பாடு மற்றும் வறுமைக் குறைப்பு அமைச்சகம் மற்றும் மனநலம் மற்றும் அடிமையாதல் அமைச்சகத்தின் கூட்டு அறிக்கையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, வன்கூவரில் 686 பேருக்கும், விக்டோரியாவில் 324 பேருக்கும் இடங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

வன்கூவரில் உள்ள ஓப்பன்ஹைமர் பார்க் மற்றும் விக்டோரியாவில் உள்ள டோபஸ் பார்க் மற்றும் பண்டோரா அவென்யூ உள்ளிட்ட பெரிய தற்காலிக வீட்டு வசதிகளில் வசிக்கும் மக்களுக்காக இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, 1,700 தங்கும்விடுதி மற்றும் சமூக மைய இடங்களைப் பெறுவதற்கு நகராட்சிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.