கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2560ஆக அதிகரிப்பு- 46,895பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2560ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான நிலவரப்படி, 95பேர் உயிரிழந்ததோடு, 1541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த நிலவரப்படி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 46,895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 27,014பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 17,321பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்