‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!
கிரிக்கெட் உலகில் ‘ஹிட் மேன்’ என வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவுக்கு இன்று (வியாழக்கிழமை) 33ஆவது பிறந்த தினம் ஆகும்.
இன்றைய நன்நாளில், அவர் எதிர்பார்த்திருக்கும் சாதனைகள் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், நோயற்ற வாழ்வை வாழ வேண்டுமெனவும் ஆதவன் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
கிரிக்கெட் உலகில் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளுள் ஒன்றான ‘ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள்’ என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக் காரர் ரோஹித் சர்மா ஆவார்.
இதுதவிர, ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்றுக்கொடுத்த மகத்தான சாதனை தலைவராகவும் ரோஹித் பார்க்கப்படுகிறார்.
பல சாதனைகளுக்கு சொந்தக் காரரான ரோஹித் சர்மாவுக்கு, தற்போது சமூகவலைதளத்தின் ஊடாக இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை