கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 188பேர் உயிரிழப்பு- 1639பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் 188பேர் உயிரிழந்துள்ளதோடு, 1639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரம் ஆகும்.

இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3184ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 53,236பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 28,629பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 21,423பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.