டெஸ்ட், ரி-20 கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முதலிடம்: அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

எனினும், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் இரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மூன்று வகையான கிரிக்கெட்டுகளுக்குமான, அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம்.

இந்த பட்டியலில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, எட்டு இடங்கள் முன்னேறி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியா அணி, 2016ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.

அடுத்து ஒருநாள் அணிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில் உலக சம்பியன் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

 

ரி-20 அணிகளின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை. யாரும் எதிர்பாராத அளவு மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்ரேலியா அணி, முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல சுமார் இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்திருந்த பாகிஸ்தான் அணி, நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.