நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை தவறானது!

நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சோதனை தவறானது என நுனாவுட் பிரதேச சுகாதார அதிகாரி மருத்துவர் மைக்கேல் பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பபின் தீவின் மேல் முனையில் உள்ள பாண்ட் இன்லெட் வடக்கு சமுதாயத்தில் இருந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதுவே நுனாவுட் பிரதேசத்தில் பதிவான முதல் கொரோனா தொற்று பதிவாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு அடுத்து மேற்கொண்ட பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் நுனாவுட் பிரதேசம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில்லாத பிரதேசமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்