துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன: பிரதமர் ஜஸ்டின்

துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் கியூபெக்கோயிஸ் பிளாக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒரு வலுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த விரும்புவதால் மட்டுமல்ல, சிறுபான்மை நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது அவசியம்.

ஆகையால், நாங்கள் சபையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது’ என கூறினார்.

கனடாவில் இராணுவத் தரத் தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவித்தது.

இதற்கமைய, கனடாவில் 1,500 தாக்குதல் பாணி ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த தடை உத்தரவானது, உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்கள் இந்த வகையான ஆயுதங்களை விற்பனை செய்வது, கொண்டு செல்வது, இறக்குமதி செய்வது அல்லது பயன்படுத்துவதைத் தடைசெய்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.