மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மேலும் ஒரு வருடத்திற்கு சங்கா நீடிப்பார்?
மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை, இன்னும் ஒரு வருடம் நீடிக்க கழக நிர்வாகம் தீர்மானத்துள்ளது.
கிரிக்கெட்டின் சட்டவிதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது இதுகுறித்த அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், குமார் சங்கக்கார மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பிரித்தானியர் அல்லாத நபராக தனது பெயரை பதிவு செய்தார்.
தற்போது தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் சங்கக்காரவிற்கு புதிய தலைவரையோ அல்லது தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதையோ தெரிவு செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவி பொதுவாக ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு மாத்திரமே வழங்கப்படும். எனினும், உலகப் போர் போன்ற சில முக்கிய சந்தர்ப்பங்களில் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவி ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை