சில சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதி!

கனடா முழுவதும் உள்ள மாகாணங்கள், நடைமுறையில் உள்ள சில ஊரடங்கு விதிகளை தளர்த்தத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை தோட்டக்கலை மையங்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகங்களை திறக்க ஒன்ராறியோ அரசு அனுமதி அளித்தது.

இந்தநிலையில் கடைபிடிக்கப்பட்டுவரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கும் வகையில், பல சில்லறைக் கடைகளை மீண்டும் திறக்க ஒன்ராறியோ திட்டமிட்டுள்ளது.

இதன்படி, மே 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகள் என மூன்று தினங்களில் பகுதிப்பகுதியாக சில கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சில விதிமுறைகளுக்கு ஏற்ப கடைகள் திறக்கப்படுகின்றது. அத்துடன் அதனை கொள்வனவு செய்யும் மக்களும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்