கனடா- அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை நீடிப்பு!

கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 18ஆம் திகதி எல்லை கட்டுப்பாடுகளை மே 21ஆம் திகதி வரை நீடிக்க ஒப்புக் கொண்டன.

ஆனாலும், பாதுகாப்பு காரணமாக கனடா தற்போது இன்னும் ஒரு மாத காலம் நீடிக்கும் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.

கனேடிய அரசாங்க வட்டாரம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘கட்டுப்பாடுகளை நீக்குவது மிக விரைவானது, எனவே நாங்கள் ஒரு நீடிப்பை நோக்கி செயற்படுகிறோம். வொஷிங்டனுடனான பேச்சுவார்த்தை நேர்மறையானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான எல்லைகள் முழுவதும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலர் சாட் வோல்ஃப் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்