வணிக நிறுவனங்களுக்கான கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு: பிரதமர் ஜஸ்டின்

வணிக நிறுவனங்களுக்கான, கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, வணிக நிறுவனங்களுக்கு உதவ 75 சதவீத கூட்டாட்சி ஊதிய மானியத் திட்டம் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்திய தேசிய வேலைவாய்ப்பு எண்ணிக்கைகள் கனடா இரண்டு மாதங்களில் அதிக வேலை இழப்பைச் சந்தித்திருப்பதைக் காட்டின.

இதன் பின்னர், பிரதமர் மானியத் திட்டம் ஜூன் மாதம் 6ஆம் திகதியை தாண்டி நீட்டிக்கப்படும் என்று கூறினார். ஆனால் மேலதிக விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.