நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று!

நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் பணியில் உள்ள ஐந்து இராணுவ வீரர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வீரர்களில், நான்கு பேர் கியூபெக்கிலும் ஒருவர் ஒன்ராறியோவிலும் உள்ளனர்.

இராணுவத்தின் 1,700 உறுப்பினர்கள் மருத்துவ இல்லங்களில் (நர்சிங் ஹோம்) பணிபுரிகின்றனர். அங்கு வழக்கமான ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றால் சூழப்பட்டுள்ளனர்.

கனேடிய படைகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவ இல்லங்களுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு ஏற்படும் நோய் குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இராணுவத்திடம் உதவி கோரினர்.

இதன்பின்னர், இராணுவ உதவி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நிர்வாக கடமைகளை நிர்வகிக்க உதவுவதற்கும், நோயாளியின் கவனிப்பில் கவனம் செலுத்துவதற்கும், அதிக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு அளிப்பதற்காக செவிலியர்கள் மற்றும் தனிப்பட்ட ஆதரவு தொழிலாளர்களை விடுவிப்பதற்கும் கனேடிய ஆயுதப்படைகளுடன் கூடிய உறுப்பினர்கள் ஐந்து நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்பபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.