இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்: இந்தியா அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாராக இருப்பதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தொடரை இரத்து செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்த நிலையிலேயே இந்தியா இந்த பதிலை அளித்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று ரி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சந்தேகமாக இருந்தது.

இந்நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில் ‘முடக்கநிலை தளர்வுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவெடுக்கும்.

வீரர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைகள் எதுவும் இல்லை என்றால் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்ய இந்திய அணி தயாராக உள்ளது’ என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.