வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் மீண்டும் உயர்வு!

வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதிகாரிகள் மீண்டும் வடக்கு சஸ்காட்செவன் ஆற்றின் கரையில் இருந்து விலகி இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்மட்டம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருப்பதாகவும், நீரோட்ட வீதம் வழக்கமான வீதத்தை விட இருமடங்காக இருப்பதால் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் கூறியது

கடந்த வாரம் இதே போன்றதொரு எச்சரிக்கையொன்று தீயணைப்பு மீட்பு சேவைகளால் விடுக்கப்பட்டது. இதன்போது, ஆற்றில் நீர் மட்டங்கள் விரைவாக உயரும்போது, அதில் மிதக்கும் குப்பைகளின் அதிகரிப்புடன், யாரும் அருகில் இருப்பதும் பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்