இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுவீதம் குறைந்து வருகின்றது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த இத்தாலியில், தற்போது வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருகின்றது.

ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து இத்தாலியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருவதனை புள்ளிவிபரங்களின் ஊடாக அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 321பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 71பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்து தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகின்றது.

இதுவரை இத்தாலியில் வைரஸ் தொற்றுக்கு 233,836பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 33,601பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 39,297பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 353பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மேலும், 160,938பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.