ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு!

ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோவில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மார்ச் 17ஆம் திகதி ஒன்றாரியோ மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது.

தற்போது வரை அங்கு தொற்றுவீதம் குறையாததால், அவசரக்கால நிலையை கூடுதல் நான்கு வாரங்களுக்கு நீடித்துள்ளது.

மாகாணத்தின் அவசரக்கால நிலைமையின் கீழ், பல அவசர உத்தரவுகள் உள்ளன. இந்த உத்தரவுகள் தற்போது ஒரே வீட்டைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூடுதலையும் தடைசெய்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்