இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதி ஜனனி சஷிகலா விஜேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷெஹான் மதுஷங்க பன்னல பொலிஸாரால் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவத்தினை அடுத்து ஷெஹான் மதுஷங்க, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.