ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பம்

ஐ.பி.எல். போட்டி ஆரம்பமானது ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கு தொடர்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய கிரிக்கெட் சபை தயாரித்துள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் அமீரகம் செல்வதற்கு முன்பாக இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதில் ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்தால் மட்டுமே அமீரகம் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமை, அதன் பிறகு மேலும் இரண்டு முறை பரிசோதனை போன்ற நடைமுறை அவர்களுக்கும் பொருந்தும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்