திருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.

12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று இன்று (29)நடாத்தியது.
12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை நடாத்தியதுடன் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரு  அணிகளும் இணைச்சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மாவட்ட செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பதிலுக்கு துடுப்படுத்தாடிய சேருவல பிரதேச செயலக அணி 4 பந்து ஓவர்களும் 5 பந்தும் நிறைவுற்ற வேளை 5 விக்கட் இழப்பிற்கு 44 ஓட்டங்களை பெற்றபோது போட்டி போதிய வெளிச்சமின்மையால் இடைநிறுத்தப்பட்டது.
தொடரின் சிறப்பாட்டக்காரராக மாவட்ட செயலக அணியின் சக்திகுமரனும் போட்டியின் ஆட்டநாயகனாக சேருவல பிரதேச செயலக அணியின் தலைவர் சந்தனவும்  தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக மாவட்ட செயலக அணியின் துவாரகனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அடுத்த தடவை 13வது மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை கோமரங்கடவெல பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்க வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம் .ஏ.அனஸ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்