ஜாயா பாரூக் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் அல் ஜாயா விளையாட்டுக்கழகம் வசமானது.

கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்   மற்றும் ஜாயா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவருமான மறைந்த மர்ஹூம் ஜாயா பாரூக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜாயா வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு  ஏழு  பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று கந்தளாய் அல் தாரீக் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(6) நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில் பன்னிரண்டு விளையாட்டுக்கழகங்கள் பங்கு பற்றின.
இறுதிப் போட்டியில்
   அல்ஜாயா விளையாட்டுக்கழகம்  மற்றும் சன்றைஸ் விளையாட்டு கழகங்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன இறுதிப்போட்டியில் அல் ஜாயா விளையாட்டுக் கழகம் 3:1 என்ற கோல் கணக்கில்  சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்து ஜாயா பாரூக் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினை தம் வசப்படுத்தியது.
வெற்றிக்கிண்ணத்தினை கந்தளாய் பிரதேச சபை
உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் மற்றும் மறைந்த  மர்ஹும் ஜாயா பாருக்கின் புதல்வர் எம்.எப்.எம்.றிபான் ஆகியோர் இணைந்து வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி வைத்தார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.