தொடர்ந்து முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி !!

மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொல்லார்ட் 13 பந்தி் 25 ரன்கள் அடித்தார். குருணால் பாண்ட்யா கடைசி 4 பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. பேர்ஸ்டோவ் தொடக்கத்தில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்த தொடங்கினார். அவரால் சராமரியாக வெடிக்க இயலவில்லை. இதனால் 25 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த மணிஷ் பாண்டே 30 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 3 ரன்னிலும், பிரியம் கார்க் 8 ரன்னிலும் வெளியேற நெருக்கடி ஏற்பட்டது.

வார்னர் போராடி பார்த்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் 9 பந்தில் 20 ரன்கள் அடித்தும் பலன் அளிக்காததால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்