சூர்யகுமார் யாதவ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை!!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மாஸ் காட்டினர். 4.5 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருக்கும்போது மும்பை முதல் விக்கெட்டை இழந்தது. டி காக் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 10-வது ஓவரின் முதல் பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 9.2 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது.

கடந்த போட்டியில் 4 பந்தில் 20 ரன்கள் அடித்ததால் குருணால் பாண்ட்யா முன்னதாக களம் இறக்கப்பட்டார். ஆனால் இன்று 17 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை 14 ஓவரில் 117 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 33 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 79 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.